ஒமைக்ரான் பரவலுக்கு மத்தியில் இஸ்ரேலில் 60 வயதுக்கு மேற்பட்டோர் மற்றும் மருத்துவ பணியாளர்களுக்கு 4ஆவது டோஸ் தடுப்பூசியை செலுத்த அந்நாட்டு அரசு அனுமதி வழங்க உள்ளது.
சுகாதார நிபுணர் குழு பரிந்துரைத்த இந்த முடிவிற்கு அந்நாட்டு பிரதமர் நஃப்தாலி பென்னெட் வரவேற்பு தெரிவித்துள்ளார். நாட்டில் ஒமைக்ரான் பாதித்த 60 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் உயிரிழந்ததையடுத்து அரசின் இந்த உடனடி முடிவு வெளியாகி உள்ளது.
அந்நாட்டில் குறைந்தபட்சம் 340 பேர் ஒமைக்ரான் தொற்றுக்கு ஆளாகியுள்ளதாக சுகாதாரத்துறையினர் தெரிவித்துள்ள நிலையில் அமெரிக்கா, ஜெர்மனி, இத்தாலி,துருக்கி, கனடா உள்ளிட்ட நாடுகளுக்கு மக்கள் பயணிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.