2022-ஆம் ஆண்டு கொரோனாவை முடிவுக்குக் கொண்டுவரும் ஆண்டாக இருக்க வேண்டும் என உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் தெரிவித்துள்ளார்.
ஜெனீவாவில் பேசிய அவர், 2020 ஆம் ஆண்டில் எச்.ஐ.வி, மலேரியா மற்றும் காசநோய் ஆகியவற்றால் ஏற்பட்ட உயிரிழப்புகளை விட, 2021-ல் கொரோனா காரணமாக உலகளவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகம் என்றார்.
கொரோனாவின் மாறுபாடான ஒமிக்ரான் தென் ஆப்பிரிக்காவின் கண்டறியப்பட்ட நிலையில், தற்போது அது பல நாடுகளுக்கு பரவி வருகிறது என்றும் கூறினார்.