ராட்சத பட்டத்தின் இழுவிசையின் மூலம் அட்லாண்டிக் பெருங்கடலில் 6 ஆயிரத்து 400 கிலோ மீட்டர் தூரத்திற்கு பயணித்து போர்ச்சுகல் வீரர் புது மைல்கல் படைத்துள்ளார்.
கஸ்கைய்ஸ் கடற்பரப்பில் இருந்து தன் பயணத்தை தொடங்கிய பிரான்சிஸ்கோ லுபின்கா, கரீபியன் தீவான Martiniqueவில் தரையிறங்கி இந்த மைல்கல்லை எட்டி உள்ளார்.
படகின் முன் ராட்சத பட்டத்தை பறக்கவிட்டு காற்றின் வேகத்திற்கு ஏற்றார் போல் பயணித்த பிரான்சிஸ்கோ ஏறத்தாழ 25 நாட்கள் கடலில் பயணித்து உள்ளார்.