எல்லை தாண்டி இலங்கை கடற்பரப்பினுள் நுழைகின்ற இந்திய மீன்பிடிப் படகுகள் பறிமுதல் செய்யப்பட்டு, சட்ட ரீதியாக அரசுடமையாக்கப்படும் என இலங்கை கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.
இலங்கை யாழ்ப்பாணம் - மயிலிட்டித் துறைமுகத்துக்கு ஆய்வுக்கு வந்த டக்ளஸ் தேவானந்தா செய்தியாளர்களிடம் பேசினார். சீன தூதுவரின் இலங்கைப் பயணத்திற்கும் தமிழக மீனவர்களின் கைதிற்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்றும் அவர் கூறினார்.