சீனா மற்றும் பாகிஸ்தானின் அச்சுறுத்தல்களை எதிர்கொள்ளும் வகையில், உலகின் அதிநவீன வான் பாதுகாப்பு கருவியான எஸ்-400, இந்தியாவில் முதல்முறையாக பஞ்சாபில் நிறுவப்பட்டுள்ளது.
இன்னும் ஒருசில வாரங்களில் இது பயன்பாட்டுக்கு வரும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இது வான் மண்டலத்தை பாதுகாப்பு கவசம் போல் காக்கும் திறன் கொண்டது. ரஷ்யாவிடம் இருந்து மொத்தம் 5 "எஸ்-400" கருவிகளை, 35 ஆயிரம் கோடி ரூபாய்க்கு இந்தியா வாங்குகிறது.
இதர 4 கருவிகளும் வெளிநாடுகளின் சவால்களை எதிர்கொள்ளும் வகையில், நாட்டின் பிற முக்கிய பகுதிகளில் நிறுவப்படும் என கூறப்படுகிறது. 400 கிலோ மீட்டர் தொலைவில், எந்த திசையில் இருந்து பாய்ந்து வரும் ஏவுகணைகளையும் ரேடார் மூலம் கண்டறிந்து, அதை நடுவானிலேயே ஏவுகணையால் தாக்கி அழிக்கும் திறன் கொண்டது எஸ்.400 வான் பாதுகாப்பு கருவி. மேலும், இது ஒரே நேரத்தில் 36 இலக்குகளை தாக்கி அழிக்கும் அதிநவீன வசதிகளை கொண்டது.