சென்னையில் உள்ள தமிழ்நாடு மாநில தலைமை கூட்டுறவு வங்கி மற்றும் அனைத்து மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகளை இணைத்து தமிழ்நாடு வங்கியை உருவாக்க வேண்டும் என கூட்டுறவு வங்கி ஊழியர் சம்மேளனம் கோரிக்கை விடுத்துள்ளது.
மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மற்றும் நகர்ப்புற கூட்டுறவு வங்கியில் பணிபுரிந்து ஓய்வு பெறும் ஊழியர்களுக்கு ஓய்வூதியத்தை உயர்த்தி வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, சென்னை வள்ளுவர் கோட்டத்தில் கூட்டுறவு வங்கி ஊழியர் சம்மேளனம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.