எதிர்க்கட்சித் தலைவர்களின் தொலைபேசி ஒட்டுக் கேட்கப்படுவதாக சமாஜ்வாதி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் கூறியதற்கு பாஜக எம்பியான ஹேமா மாலினி மறுப்புத் தெரிவித்துள்ளார்.
இதுபோன்ற புகார்கள் எதிர்க்கட்சியினரால் தேர்தல் நேரத்தில் மட்டும் எழுப்பப்படுவது ஏன் என்றும் அவர் கேள்வி எழுப்பினார். மதுராவில் இருந்து இந்தூர் வந்த ஹேமா மாலினி அங்கு செய்தியாளர்களிடம் பேசினார்.
அப்போது அயோத்தியில் ராமர் கோவிலும் வாரணாசியில் காசி விஸ்வநாதர் தாமும் பிரதமர் மோடி அரசால் புதுப்பிக்கப்பட்டது போல மதுராவின் கிருஷ்ணர் கோவில் வளாகமும் புதுப்பிக்கப்படும் நாள் வரும் என்று கூறினார்.