பஞ்சாப் மாநிலத்தில், மத உணர்வுகளை புண்படுத்தியதற்காக மேலும் ஒருவர் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
நேற்று, பொற்கோவிலுக்குள் அத்துமீறி நுழைந்து புனித நூல் மற்றும் வைரம் பதித்த வாளை அவமதிக்க முயன்ற உத்தர பிரதேசத்தை சேர்ந்த நபரை அங்கிருந்த பக்தர்கள் அடித்து கொன்றனர்.
அந்த சர்ச்சை ஓய்வதற்குள், இன்று அதிகாலை 4 மணியளவில், கபுர்தளா மாவட்டத்தில் உள்ள குருத்வாரா-வில் ஏற்றப்பட்டிருந்த சீக்கியர்களின் கொடியை அவமதித்ததாக கூறி அப்பகுதி மக்கள் ஒருவனை சரமாரியாகத் தாக்கினர்.
போலீசார் அவனை அழைத்து செல்ல முற்பட்ட போது, தங்கள் முன்னிலையில் விசாரிக்குமாறு அவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து போலீசாருடன் ஏற்பட்ட கைகலப்பிற்கு மத்தியில் அவர்கள் அந்த நபர் அடித்தே கொலை செய்தனர்.