நடப்பு நிதியாண்டில் 30 இலட்சத்து 40 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு ஏற்றுமதி என்கிற இலக்கு எட்டப்படும் என மத்திய வணிகத்துறை அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் உட்கட்டமைப்பு வசதிகளை உருவாக்கவும், தொழில் முதலீடுகளுக்கும் ஏழு இலட்சத்து 60 ஆயிரம் கோடி ரூபாயை ஒதுக்க ஐக்கிய அரபு அமீரகம் உறுதியளித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இந்தியா - ஐக்கிய அரபு அமீரகம் இடையே வரியற்ற வணிகம் செய்வதற்கான உடன்படிக்கையை எட்டுவதற்கான பேச்சு நடைபெற்று வருவதாகவும் அவர் குறிப்பிட்டார். மத்தியக் கிழக்கு நாடுகள், ஆப்பிரிக்க நாடுகளுடன் இந்திய வணிகத்துக்கான நுழைவாயிலாக ஐக்கிய அரபு அமீரகம் இருக்கும் என்றும் பியூஷ் கோயல் தெரிவித்தார்.