ஈராக் தலைநகர் பாக்தாதில் உள்ள அமெரிக்கத் தூதரகத்தைக் குறிவைத்து வீசப்பட்ட 2 ராக்கெட்டுகளை பாதுகாப்பு படையினர் சுட்டு வீழ்த்தினர்.
பாதுகாப்பு மிகுந்த பசுமைப்பகுதியான அமெரிக்கத் தூதரகம் பகுதியில் இரண்டு ராக்கெட்டுகள் ஏவப்பட்டன .முதல் ராக்கெட் சுடப்பட்டு வீழ்த்தப்பட்டது. இரண்டாவது ராக்கெட்டும் பாதுகாப்பு படையினரால் சுடப்பட்டு அங்கிருந்த சதுக்கத்தில் விழுந்ததில் சில வாகனங்கள் சேதம் அடைந்தன.
கடந்த நவம்பர் மாதத்தில் பிரதமர் முஸ்தபா அல் கதாமியின் வீட்டின் அருகிலும் ராக்கெட் தாக்குதல் நடைபெற்றது.அதில் அவர் காயமின்றி உயிர் தப்பினார்