பாகிஸ்தானில் வங்கியில் எரிவாயு சிலிண்டர் வெடித்த விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 15 ஆக அதிகரித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கராச்சி ஷேர்ஷா பகுதியில் உள்ள வங்கியில் சிலிண்டரில் இருந்து எரிவாயு கசிந்து பயங்கர விபத்து நேர்ந்ததாக கூறப்படுகிறது. கட்டத்தின் 2 மாடிகள் உருக்குலைந்து போனதாகவும், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 15ஐ கடந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
16 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெறுவதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.