நாடு முழுவதும் உள்ள 65 ஆயிரம் தொடக்க வேளாண்மைக் கூட்டுறவுக் கடன் சங்கங்களைக் கணினிமயமாக்கி ஒரே மென்பொருளால் இணைக்க மத்திய அரசு தீர்மானித்துள்ளதாக அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.
மத்தியக் கூட்டுறவுத் துறை அமைச்சரான அமித் ஷா உத்தரப்பிரதேசத்தில் 13 கூட்டுறவு வங்கிக் கிளைகளையும், 294 தொடக்க வேளாண்மைக் கூட்டுறவுக் கடன் சங்கங்களையும் தொடக்கி வைத்துப் பேசினார்.
65 ஆயிரம் கூட்டுறவுக் கடன் சங்கங்களையும், மாவட்ட, மாநிலக் கூட்டுறவு வங்கிகளையும், நபார்டு வங்கியையும் ஒரே மென்பொருள் மூலம் இணைக்க உள்ளதாகவும், இது வேளாண் நிதியளிப்புக்குப் புதிய தொடக்கமாக அமையும் என்றும் அமித்ஷா குறிப்பிட்டார்.