எதிர்க்கட்சி உறுப்பினர்களின் தொடர் அமளி காரணமாக வரும் 20ஆம் தேதி வரை மாநிலங்களவை ஒத்திவைக்கப்படுவதாக அவைத்தலைவர் வெங்கையா நாயுடு அறிவித்துள்ளார்.
12 எம்பிக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாகவும், லக்கிம்புர் கேரி வன்முறை தொடர்பாக மத்திய அமைச்சர் அஜய் மிஸ்ரா ராஜினாமா செய்ய வேண்டும் என்றும் எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அமளியில் ஈடுபடுகின்றனர்.
அமளி காரணமாக தினந்தோறும் அவ்வப்போது அவை ஒத்திவைக்கப்படும் நிலையில், இன்று காலையும் கூச்சல், குழப்பம் ஏற்பட்டதை அடுத்து வரும் திங்கட்கிழமை வரை ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.