வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன்னின் தந்தையும் முன்னாள் அதிபருமான கிம் ஜோங் இல்லின் 10ஆம் ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்படுவதையொட்டி, அந்நாட்டு மக்கள் 10 நாட்களுக்கு சிரிக்க தடை விதிக்கப்படுவதாக வடகொரிய அரசாங்கம் அறிவித்துள்ளது.
அடுத்த 10 நாட்களுக்கு வட கொரியர்கள் சிரிக்கக் கூடாது, மது அருந்தக்கூடாது, பிறந்தநாள் விழாக்களை கொண்டாடக் கூடாது என்பன உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளை விதிக்கப்பட்டுள்ளன. அதுமட்டுமில்லாமல், இந்த துக்க காலத்தில் கட்டுபாடுகளை மீறுவோர் கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கிம் ஜோங் இல்லின் மறைவுக்கு பிறகு, ஒவ்வொரு ஆண்டும் வடகொரியாவில் இந்த நடைமுறை கடைபிடிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.