சபரிமலையில் உள்ள பம்பை நதியில் புனித நீராடும் ஐயப்ப பக்தர்களின் கூட்டம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது.
சபரிமலையில் தினசரி தரிசனம் செய்யும் பக்தர்களின் எண்ணிக்கை சராசரியாக 40 ஆயிரத்தை கடந்து பதிவாகி வருகிறது. கொரோனா ஊரடங்கு காரணமாக பக்தர்கள் பம்பை நதியில் நீராட தடை விதிக்கப்பட்ட நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் பக்தர்கள் புனித நீராடவும், பலி தர்ப்பணம் செய்யவும் கேரள அரசும் திருவிதாங்கூர் தேவசம் போர்டும் அனுமதி அளித்தது.
இதனையடுத்து பம்பையில் புனித நீராடி வரும் பக்தர்கள், முன்னோர்களுக்கான படையல் வைத்து பலி தர்ப்பணமும் செய்து வருகின்றனர்.