சமூக ஊடகங்கள் தனிநபர் தகவல் பாதுகாப்பு விதிகளை மீறினால் கடுமையான அபராதம் விதிக்க நாடாளுமன்றக் கூட்டுக் குழு மத்திய அரசுக்குப் பரிந்துரை செய்துள்ளது.
இது சட்டமாக்கப்பட்டால் கடுமையான விதிமீறல்களுக்கு 15 கோடி ரூபாய் வரை அபராதம் விதிக்கவும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
பேஸ்புக், டிவிட்டர், வாட்ஸ் ஆப், கூகுள், அமேசான் போன்ற சமூக ஊடகங்கள் மற்றும் தொழில் நிறுவனங்கள், தனிநபர் தகவல் பாதுகாப்பு விதிகளை மீறாமல் இருக்க இந்த கடுமையான நடவடிக்கை உதவும் என்று கருதப்படுகிறது.