பாகிஸ்தானில் இருந்து இந்தியாவைத் தாக்கும் தீவிரவாதக் குழுக்களைக் கட்டுப்படுத்த பாகிஸ்தான் அரசு போதுமான நடவடிக்கைகள் எடுக்கவில்லை என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது.
எந்தவிதத் தாமதமும் காரணமும் கூறாமல் உடனடியாக தனது மண்ணில் செயல்படும் தீவிரவாதக் குழுக்களை அப்புறப்படுத்த வேண்டும் என்றும் அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது. தீவிரவாதம் குறித்த ஆண்டறிக்கையில் அமெரிக்க அரசு , இந்தியாவைக் குறி வைத்துத் தாக்குதல் நடத்தும் லஷ்கர் இ தொய்பா ஜெய்ஷே முகமது உள்பட பல்வேறு தீவிரவாத இயக்கங்கள் பாகிஸ்தானில் தொடர்ந்து இயங்கி வருவதாகத் தெரிவித்துள்ளது.
ஆப்கானில் தாலிபன் வன்முறையைக் குறைப்பதற்கு பாகிஸ்தான் ஆக்கப்பூர்வமான பங்களிப்பை செய்த போதும் போதுமான அளவு நடவடிக்கைகளை எடுக்காமல் பொருளாதார கண்காணிப்புக் குழுவின் கிரே பட்டியலில் தொடர்ந்து நீடிப்பதையும் அந்த அறிக்கை சுட்டிக் காட்டியுள்ளது. பாகிஸ்தான் தீவிரவாதிகளை ஒடுக்குவதில் இந்திய ராணுவம் தீரத்துடன் செயல்பட்டு வருவதாகவும் தீவிரவாதம் தொடர்பான அறிக்கை தெரிவித்துள்ளது.