அடுத்த ஆண்டு மார்ச் மாதத்திற்குள் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை அளிக்கக் கூடிய மாத்திரைகள் பொது பயன்பாட்டுக்கு வருமென பிரிட்டன் வைரஸ் தடுப்பு குழுத் தலைவர் எட்டி கிரே தெரிவித்துள்ளார்.
மெர்க் மற்றும் ரிட்ஜ்பாக் பையோதெரபியூடிக்ஸ் நிறுவனங்களின் மொல்னுபிரவிர் மாத்திரை தீவிர கொரோனா தொற்றுள்ளவர்களை மருத்துவமனையில் அனுமதிப்பது மற்றும் இறப்பு விகிதத்தை தடுப்பதில் 39சதவீதம் செயலாற்றுவதாகவும், அதேநேரம் பைசர் நிறுவனத்தின் பாக்ஸ்லோவிட் 89 சதவீதம் வரை செயல்திறன் கொண்டு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மொல்னுபிரவர் மாத்திரைக்கு அவசர கால அனுமதி வழங்கப்பட்டுள்ளள நிலையில் பைசரின் பாக்ஸ்லோவிட் மாத்திரைக்கு விரைவில் அனுமதி வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.