பாலியல் புகாரில் சிக்கிய கோவா மாநில சமூக நலத்துறை அமைச்சர் மிலிந்த் நாயக், தனது பதவியை ராஜினாமா செய்தார்.
நவம்பர் 30ஆம் தேதி அம்மாநில காங்கிரஸ் கட்சியினர், ஆளும் பாஜகவைச் சேர்ந்த அமைச்சர் ஒருவர் பாலியல் குற்றச்சாட்டில் சிக்கியுள்ளதாகவும், 15 நாட்களில் பாஜக அவரை அமைச்சரவையில் இருந்து நீக்காவிட்டால் அவரின் பெயரை வெளியிடுவோம் என தெரிவித்தனர்.
இந்நிலையில், தாங்கள் அளித்த அவகாசம் முடிந்ததாகக் கூறிய காங்கிரஸ் கட்சியினர், மிலிந்த் நாயக்கின் பெயரை குறிப்பிட்டு, அவர் பீகாரைச் சேர்ந்த ஒரு பெண்ணிற்கு பாலியல் தொல்லை தந்ததாக குற்றஞ்சாட்டினர்.
இதனைத்தொடர்ந்து, வழக்கில் சுதந்திரமான மற்றும் நியாயமான விசாரணை நடைபெற வேண்டும் என தனது பதவியை ராஜினாமா செய்வதாக மிலிந்த் அறிவித்தார்.