ஒமைக்ரான் வைரஸ் பரவல் அச்சுறுத்தலின் மத்தியில் விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் தென்னாப்பிரிக்கா புறப்பட்டனர்.
வரும் 26ஆம் தேதி தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி தொடங்க உள்ள நிலையில், அதில் பங்கேற்க உள்ள இந்திய வீரர்கள் ஜோகன்னஸ்பெக்கிற்கு பயணமாகினர்.
முதன்முதலாக ஒமைக்ரான் வகை கொரோனா தென்னாப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட நிலையில், அந்நாட்டில் தொற்றுப் பரவல் அதிகரித்து வருகிறது. இந்த சூழலில் அங்கு செல்லும் இந்திய அணி வீரர்கள் தீவிர நோய்த்தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்ற உள்ளனர்.