இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலையின் போது அமலான ஊரடங்கு காலத்தில், குடும்ப வன்முறை வழக்குகள் குறைந்திருப்பதாக மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக மாநிலங்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு எழுத்துப் பூர்வமாக பதிலளித்த ஸ்மிருதி இரானி, தேசிய குற்ற ஆவணக் காப்பகம் அளித்த அறிக்கையின் படி, கடந்த ஆண்டு கொரோனா முதல் அலையின் போது ஏப்ரல் மாதம் முதல் ஜூன் வரையில் 3 ஆயிரத்து 748 குடும்ப வன்முறை வழக்குகள் பதிவாகியிருந்ததாகவும் இந்த ஆண்டு 3 ஆயிரத்து 582 வழக்குகள் மட்டுமே பதிவாகியிருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.