பிரிட்டனில் முன்னெப்போதும் இல்லாத அளவில் ஒருநாள் கொரோனா பாதிப்பு 78 ஆயிரத்து கடந்து புது உச்சம் தொட்டுள்ளது.
கடந்த ஒருநாளில் 78 ஆயிரத்து 610 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளதாகவும், வரும் நாட்களில் பரவல் எண்ணிக்கை இன்னும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும் பிரிட்டன் சுகாதாரத்துறை எச்சரித்துள்ளது.
ஒட்டுமொத்த மக்கள் தொகையில் ஒரு கோடியே 10 லட்சம் பேர் கொரோனா சிகிச்சை பெற்றுவருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தொற்று அதிகரிப்புக்கு மத்தியில் மீண்டும் ஊரடங்கு அமல்படுத்துவதற்கான மசோதா நிராகரிக்கப்பட்டுள்ளதால், மக்கள் பூஸ்டர் டோஸ் செலுத்திக் கொள்ள பிரதமர் போரிஸ் ஜான்சன் அறிவுறுத்தி உள்ளார்.