நடிகை ஜாக்குலின் பெர்னாண்டசை சுகேஷ் சந்திரசேகர் ஏமாற்றியது எப்படி என்று அமலாக்கத்துறை முன்பு ஆஜராகி வாக்குமூலம் அளித்துள்ளார்.
தனியார் டிவி நிறுவன உரிமையாளர் என்றும் முன்னாள் முதலமைச்சரின் உறவினர் என்றும் கூறி தம்மிடம் சுகேஷ் பழகியதாகவும் அதை நம்பி தாம் ஏமாந்ததாகவும் ஜாக்குலின் தெரிவித்துள்ளார். 200 கோடி ரூபாய் மோசடி வழக்குக்கும் தமக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை என்றும் நடிகை தெரிவித்துள்ளார்.
சுகேஷின் அறிமுகத்தைத் தொடர்ந்து கோடிக் கணக்கான ரூபாய் மதிப்புடைய பொருட்கள், கார் போன்றவற்றை சுகேஷ் ஜாக்குலினுக்குப் பரிசாக அளித்ததாகக் கூறப்படுகிறது. இது குறித்த விசாரணை தீவிரம் அடைந்துள்ளது.