பிரபஞ்ச அழகி பட்டம் வென்ற பஞ்சாப் மாநிலம் சண்டிகரைச் சேர்ந்த 21 வயது இளம் பெண் ஹர்னாஸ் கவுர் சாந்து இஸ்ரேல் நாட்டில் இருந்து இந்தியா திரும்பினார்.
மும்பை சர்வதேச விமான நிலையத்தில் வந்திறங்கிய ஹர்னாஸ் கவுருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. தேசியக் கொடியுடன் ரசிகர்களும் அதிகாரிகளும் அவரை வரவேற்றனர்.
மகுடம் தரித்து காட்சியளித்த ஹர்னாஸ் முகக்கவசத்தை நீக்கி பத்திரிகையாளர்கள் மற்றும் கேமராமேன்கள் படம் எடுக்க அழகான புன்னகையை உதிர்த்தார்