மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா வாழ்ந்த வீட்டை நினைவிடமாக மாற்றும் நடவடிக்கையை ரத்து செய்த தனி நீதிபதியின் தீர்ப்பை எதிர்த்து, மேல்முறையீடு செய்ய அதிமுகவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
வேதா நிலையத்தை கையகப்படுத்தியதை எதிர்த்து, ஜெயலலிதாவின் வாரிசுகளாக அறிவிக்கப்பட்ட தீபா, தீபக் சார்பில் வழக்குகள் தொடரப்பட்ட நிலையில், வீட்டை கையகப்படுத்தும் அரசின் நடவடிக்கையை ரத்து செய்து தனி நீதிபதி தீர்ப்பு வழங்கினார்.
இந்நிலையில், இதை எதிர்த்து மேல்முறையீடு செய்ய அனுமதி கோரி, முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்.
இதில், அதிமுக மேல்முறையீடு செய்ய அனுமதி அளிப்பதாக உத்தரவிட்ட நீதிபதிகள், தமிழக அரசின் நிலைப்பாட்டை தெரிவிக்க உத்தரவிட்டு, அடுத்தக்கட்ட விசாரணையை வரும் 20-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.