தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒரு நாள் போட்டி தொடரில் ரோஹித் ஷர்மா தலைமையில் விளையாடத் தயாராக இருப்பதாக விராட் கோலி தெரிவித்துள்ளார்.
கோலி தலைமை வகிக்கும் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இருந்து காயம் காரணமாக ரோஹித் ஷர்மா விலகியுள்ளார்.
ஆனால் ஒரு நாள் போட்டிக்கான கேப்டனாக ரோஹித் ஷர்மா நியமிக்கப்பட்டுள்ள நிலையில் அந்த தொடரில் இருந்து கோலி விலக உள்ளதாக தகவல்கள் வெளியாகியிருந்தன.
இதுதொடர்பாக செய்தியாளர்கள் கேட்டபோது விளக்கம் அளித்த கோலி, ஒரு நாள் தொடருக்கான வீரர்கள் தேர்வில் தானும் உள்ளதாகவும், தான் ஓய்வெடுக்க விரும்பவில்லை எனவும் தெரிவித்துள்ளார். மேலும் தனக்கும் ரோஹித் ஷர்மாவுக்கும் இடையே எந்த மோதலும் இல்லை எனவும் அவர் கூறியுள்ளார்.