அமெரிக்காவில் ஒமிக்ரான் பரவலுக்கு மத்தியில் இதுவரை கொரோனா பாதிப்புக்கு ஆளானவர்களின் மொத்த எண்ணிக்கை 5 கோடியை கடந்துள்ளது.
ஜான் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள தகவலின் படி, அந்நாட்டில் கொரோனாவுக்கு உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கையும் 8 லட்சத்தை தாண்டியுள்ளது. கடந்த வாரம் கொரோனா தொற்று பாதிப்புக்கு ஆளானவர்களில் 2 புள்ளி 9 சதவீதம் பேருக்கு ஒமிக்ரான் பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக அந்நாட்டு நோய்கள் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.
அமெரிக்காவின் 32 மாகாணங்களில் ஒமிக்ரான் பரவல் கண்டறியப்பட்டுள்ளது. இந்நிலையில் தடுப்பூசிகளால் அந்த வைரஸை திறம்பட கட்டுப்படுத்த முடியாது என மூத்த மருத்துவ விஞ்ஞானி ஆண்டனி ஃபவுசி தெரிவித்துள்ளார்.