அமேசான் காடுகள் அழிக்கப்படுவது பெருமளவு தடுக்கப்பட்டுள்ளதாக, அந்நாட்டு சுற்றுச்சூழல்துறை அமைச்சர் ஜோகுயிம் லெய்ட் தெரிவித்துள்ளார்.
உலகின் நுரையீரல் என போற்றப்படும் அமேசான் காடுகள் வேகமாக அழிக்கப்பட்டு வருவதாக புகார் எழுந்த நிலையில், 2028-க்குள் இந்த பிரச்னை முழுவதுமாக தீர்க்கப்படும், என உலக சுற்றுச்சூழல் மாநாட்டில் பிரேசில் உறுதியளித்தது.
அதன்படி, அமேசான் காடுகளில் போலீசாரை பணியமர்த்தி இரவு பகலாக கண்காணிப்பு பணி மேற்கொள்ளப்படுகிறது. இதன் எதிரொலியாக காடுகள் அழிப்பு கடந்தாண்டை விட, தற்போது 12 சதவீதம் அளவுக்கு குறைந்துள்ளதாக பிரேசில் தெரிவித்துள்ளது.