கடந்த 2021-21 நிதியாண்டில் மத்திய அரசுக்கு பெட்ரோல் டீசல் மூலமான கலால் வரிகள் மற்றும் செஸ் வரிகள் மூலம் 3 லட்சத்து 71 ஆயிரத்து 908 கோடி ரூபாய் வருவாய் கிடைத்ததாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
இது கடந்த மூன்று நிதியாண்டுகளில் எட்டு கோடி வரை கணக்கிடப்படலாம் என்றும் அவர் கூறினார்.2018 ஆம் ஆண்டில் பெட்ரோல் டீசல் மீதான கலால் வரிகள் உயர்த்தப்பட்டன. அதே நேரத்தில் மதிப்புக் கூட்டு வரிகளும் உயர்த்தப்பட்டதாக மாநிலங்களவையில் எழுத்துப் பூர்வமான விளக்கம் அளித்த நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து பெட்ரோல் டீசல் விலை உயர்ந்து வந்த நிலையில் கடந்த தீபாவளிக்கு கலால் வரிகளைக் குறைத்த மத்திய அரசு பெட்ரோலில் லிட்டருக்கு 5 ரூபாயும் டீசலுக்கு 10 ரூபாயும் விலையைக் குறைத்தது. இதனைப் பின்பற்றி பல்வேறு மாநில அரசுகளும் மதிப்புக் கூட்டு வரியைக் குறைத்தன.