தாழ்த்தப்பட்ட சமூகத்தினர் பிரிவில் கடந்த 3 ஆண்டுகளில் எந்த ஜாதியையும் புதிதாக சேர்க்கவில்லை என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
மக்களவையில் இதுதொடர்பாக எழுப்ப ப்பட்ட கேள்விக்கு எழுத்து மூலம் பதில் அளித்த மத்திய சமூக நீதித் துறை அமைச்சர் வீரேந்திர குமார், மொத்தம் ஆயிரத்து 258 ஜாதிகள் தாழ்த்தப்பட்ட பிரிவில் உள்ளன என்றார்.
இந்தப் பிரிவில் உள்ள அனைவருக்கும் அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் கல்வி, வேலைவாய்ப்பு உள்ளிட்ட சலுகைகள் அளிக்கப்படுகின்றன என்றும் அவர் தெரிவித்தார்.