கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள பாலிவுட் நடிகை கரீனா கபூர் ஒரு சூப்பர் ஸ்பெரட்டராக இருக்கலாம் என்பதால், மும்பையில் அவரது வீட்டுக்கு மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர்.
இது குறித்து மும்பை மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமக்கு எப்போது கொரோனா தொற்று ஏற்பட்டது, எங்கெல்லாம் சென்றார் எத்தனை பேருடன் அவர் தொடர்பில் இருந்தார் உள்ளிட்ட எந்த விவரங்களையும் கரீனா கபூர் சுகாதார அதிகாரிகளிடம் தெரிவிக்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா கட்டுப்பாட்டு விதிகளை மீறி கரீனா கபூர் உள்ளிட்ட பல நடிகைகளும் இந்தி திரையுலக பிரபலங்களும் கேளிக்கை நிகழ்ச்சியில் கலந்து கொண்டதால், பலருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக தொடர்ந்து செய்திகள் வெளியாகி வருகின்றன.