இங்கிலாந்தில் கிறிஸ்துமஸ் தாத்தா வேடமணிந்த முதியவர் ராட்சத சிமினியை தலையில் தூக்கி தனது 99-வது கின்னஸ் சாதனை முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.
74-வயதான ஜான் எவான்ஸ், அதிக எடையுடைய பொருட்களை தூக்கி 98 கின்னஸ் சாதனைகளை படைத்துள்ளார். அடுத்த ஆண்டு மார்ச் மாதம் 75-வது பிறந்த நாளுக்குள் 100 கின்னஸ் சாதனைகளை படைக்க திட்டமிட்டுள்ளதாக தெரிவித்த ஜான், அதற்கென ராட்சத வடிவிலான கிரீடத்தை தயாரித்துள்ளதாக தெரிவித்தார்.
நீரிழிவு, ஆஸ்துமா, ஒரு கண் பார்வை, இருதயத்திற்கு செல்லும் ரத்தக் குறைபாடு காரணமாக ஏற்படும் angina உள்ளிட்ட நோய்கள் தனக்கு இருப்பதாகவும், சாதனைக்கு வயது, நோய் தடையில்லை என்று ஜான் தெரிவித்துள்ளார்.