ஒமைக்ரான் தொற்றால் இங்கிலாந்தில் ஒருவர் உயிரிழந்த நிலையில், வரும் ஏப்ரல் மாத இறுதிக்குள் சுமார் 75 ஆயிரம் உயிரிழப்புகள் வரை ஏற்பட வாய்ப்புள்ளதாகவும், ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளர்.
இது தொடர்பாக லண்டனை சேர்ந்த மருத்துவ ஆய்வு மைய ஆராய்ச்சியாளர்கள் வெளியிட்ட அறிக்கையில், புதிய வகை வைரஸ் பாதிப்பால் தடுப்பூசி திறன் குறையும் பட்சத்தில், இந்தாண்டு ஜனவரியில் ஏற்பட்ட பாதிப்பை விட பிரிட்டன் இருமடங்கு தாக்கத்தை எதிர்கொள்ள நேரிடும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
மேலும், 4 லட்சத்து 92 ஆயிரம் பேர் வரை பாதிக்கப்படலாம் என்றும் கூறப்பட்டுள்ளது. இந்நிலையில், ஒமைக்ரான் தொற்று பாதிப்பால் பிரிட்டனில் முதல் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டு பிரதமர் போரிஸ் ஜான்சன் அறிவித்துள்ளார்.