தடுப்பூசி செலுத்திக் கொண்டதற்கான ஆவணங்கள் எப்போது வேண்டுமானலும் பரிசோதிக்கப்படலாம் என்பதால், ஆவணங்களை உடன் வைத்திருக்குமாறு புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழசை செளந்தரராஜன் கூறியுள்ளார்.
பிரதமரின் தேசிய டயாலிஸிஸ் திட்டத்தை செயல்படுத்துவது குறித்து சிறுநீரகவியல் வல்லுநர்கள் உடனான ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொண்ட பின் செய்தியாளர்களை சந்தித்த அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.