ஒமைக்ரான் வைரஸ் பரவி வரும் நிலையில் அதை தடுக்க 3 ஆவது டோஸ் எதையும் திடீரென போடத் தேவையில்லை என ICMR எனப்படும் இந்திய மருத்துவ ஆய்வுக் கவுன்சில் தெரிவித்துள்ளது.
அது போன்று இந்த தருணத்தில் கோவிஷீல்டு தடுப்பூசியின் இடைவெளியில் மாற்றம் எதையும் செய்ய வேண்டியதில்லை எனவும் அது பரிந்துரைத்துள்ளது. நாளிதழ் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் இதை தெரிவித்த ICMR நோய் தொற்று நோயியல் துறை தலைவர் சமீரன் பாண்டா, தற்போது போடப்படும் இரண்டு டோஸ் தடுப்பூசியால் சிறந்த நோய் எதிர்ப்புத் திறனை பெறமுடியும் என நம்புவதாக தெரிவித்தார்.
ஒமைக்ரான் தீவிர அறிகுறிகள் எதையும் காட்டாத தால் அதற்கு அஞ்சி அவசரப்பட்டு பூஸ்டர் டோசை போட வேண்டாம் என அவர் கூறினார்.