லியோனார்டு என்ற வால்நட்சத்திரம் இன்று இரவு பூமிக்கு அருகில் வந்து போகும் என ஐரோப்பிய விண்வெளி ஆய்வு நிலைய விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
பூமிக்கு அருகில் என்று சொன்னாலும் அது சுமார் 35 மில்லியன் கிலோ மீட்டர் தொலைவில் தான் பூமியை நெருங்கி வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நமது சூரிய குடும்பத்தில் 3 ஆயிரத்து 700 வால் நட்சத்திரங்களை விஞ்ஞானிகள் இதுவரை கண்டுபிடித்துள்ளனர்.
லியோனார்டு வால் நட்சத்திரம் சூரியனை வினாடிக்கு 47 கிலோ மீட்டர் என்ற வேகத்தில் சுற்றி வருவதாகவும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். பிரகாசமான இந்த வால் நட்சத்திரம் சராசரியாக ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே தென்படும். இந்த முறை சற்று நெருக்கமாக வருவதால் இரவு 7 மணி 22 நிமிடத்திற்கு வெறும் கண்ணால் அதை பார்க்கமுடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.