கோவாவில் அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கும் சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்தால், குடும்பத் தலைவிகளுக்கு மாதம் 5 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என திரிணாமூல் காங்கிரஸ் கட்சி வாக்குறுதி அளித்துள்ளது.
பனாஜியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய திரிணாமூல் காங்கிரஸ் கட்சி நாடாளுமன்ற உறுப்பினரும் மேலிடப் பொறுப்பாளருமான மஹுவா மொய்த்ரா இந்த அறிவிப்பை வெளியிட்டார்.
griha laxmi என்னும் திட்டத்தின் கீழ் குடும்பத்தில் ஒரு பெண்ணுக்கு மாதம் 5 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்றும் மாநிலத்தில் உள்ள சுமார் 3.5 லட்சம் குடும்பங்களை இத்திட்டம் சென்றடையும் என்றும் அவர் தெரிவித்தார்.