மனிதநேய அடிப்படையில் ஆப்கானிஸ்தானுக்கு இந்தியா வழங்கிய மருந்துப் பொருட்களை ஏற்றிக்கொண்டு சிறப்பு விமானம் காபூல் நகரைச் சென்றடைந்தது.
ஆப்கானிஸ்தானில் குழந்தைகள் உணவு, மருந்துப் பொருட்களுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகக் கூறிய ஐ.நா., அவற்றை வழங்கி உதவும்படி உலக நாடுகளுக்கு வேண்டுகோள் விடுத்தது.
இதையடுத்து இந்திய அரசு மனிதநேய அடிப்படையில் முதற்கட்டமாக ஒன்றரை டன் எடையுள்ள மருந்துப் பொருட்களை வழங்கியது. இந்த மருந்துப் பொருட்கள் ஆப்கனில் உள்ள உலக நலவாழ்வு அமைப்பினரிடம் ஒப்படைக்கப்பட்டு, காபூலில் உள்ள இந்திரா காந்தி குழந்தைகள் மருத்துவமனையில் பயன்படுத்தப்படும் என இந்தியாவுக்கான ஆப்கன் தூதர் தெரிவித்துள்ளார்.