சமூக ஊடகங்களில் பரவும் தீமையான கருத்துகளைத் தடுக்க கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
மாநிலங்களவையில் கேள்விகளுக்கு எழுத்துப்பூர்வமான பதிலை அவர் தாக்கல் செய்தார்.
முகநூல் போன்ற சமூக ஊடகங்களில் பொய்யான தகவல்கள் பரப்பப்படுவதாகவும் பகையைத் தூண்டும் வகையிலான கருத்துகள், போன்றவை குறித்து எழுப்பப்பட்ட புகார்களின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.