இந்தியாவில் 37 சதவீத ரயில்கள் மட்டுமே டீசல் என்ஜினில் இயக்கப்படுகின்றன என்றும் மீதி 63 சதவீதம் ரயில்கள் மின்சாரத்தில் இயங்குகின்றன என்று ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார்.
மாநிலங்களவையில் இது தொடர்பான கேள்விக்கு எழுத்துமூலம் அவர் அளித்த பதிலில், 2019-20 ஆண்டு அறிக்கைப்படி டீசல் ரயில் என்ஜின்களுக்கு 23 ஆயிரத்து 706 லிட்டர் டீசல் செலவிடப்பட்டுள்ளது என்றார். அதே ஆண்டில் ஒரு லட்சத்து 38 ஆயிரத்து 547 லட்சம் கிலோ வாட் மின்சாரம், ரயில்களை இயக்கப் பயன்படுத்தப்பட்டுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.
திருவனந்தபுரத்தில் இருந்து காசர்கோட்டுக்கு மணிக்கு 530 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லும் ரயில்சேவையை தொடங்க திட்டமிட்டுள்ளதாகவும் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார்.