ஒமைக்ரான் வகை கொரோனா தொற்றின் அச்சம் உள்ள நிலையில், இந்தியாவில் முகக்கவசத்தை மக்கள் பயன்படுத்துவது குறைந்துள்ளதாக நிதி ஆயோக் உறுப்பினர் வி.கே.பால் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், உலக அளவில் ஒமைக்ரான் வகை கொரோனா தொற்று அச்சுறுத்தி வரும் நிலையில், முகக்கவசம் பயன்படுத்துவது குறைந்துள்ளது குறித்து உலக நலவாழ்வு அமைப்பு எச்சரித்துள்ளதாகத் தெரிவித்தார்.
இந்தியாவிலும் அபாயகரமான, ஏற்கத்தகாத அளவில் முகக்கவசம் பயன்படுத்துவது குறைந்துள்ளதைச் சுட்டிக் காட்டினார். தடுப்பூசிகளும், முகக்கவசங்களும் முக்கியமானவை என்பதை நாம் நினைவிற்கொள்ள வேண்டும் எனக் குறிப்பிட்டார்.