ஹெலிகாப்டர் விபத்தில் பலியான பிரிகேடியர் லக்வீந்தர் சிங் லிடரின் உடல், தலைவர்கள் மற்றும் குடும்பத்தினரின் அஞ்சலிக்குப் பின் முழு ராணுவ மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது.
குன்னூரில் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த முப்படைகளின் தலைமைத் தளபதி பிபின் ராவத், அவர் மனைவி மதுலிகா உள்ளிட்ட 13 பேரின் உடல்கள் கோவையில் இருந்து டெல்லிக்குக் கொண்டுவரப்பட்டன. டெல்லி பாலம் விமானப்படைத் தளத்தில் வைக்கப்பட்ட உடல்களுக்குப் பிரதமர் நரேந்திர மோடி மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.
டெல்லி கண்டோன்மென்ட் பிரார் சதுக்கத்தில் வைக்கப்பட்ட பிரிகேடியர் லக்வீந்தர் சிங்கின் உடலுக்குப் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.
அரியானா முதலமைச்சர் மனோகர் லால் கட்டாரும் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.
ராணுவத் தளபதி மனோஜ் முகுந்த் நரவானே, கடற்படைத் தளபதி ஹரிக்குமார், விமானப்படைத் தளபதி விவேக்ராம் சவுத்ரி ஆகியோரும் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்.
தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.
லக்வீந்தர் சிங்கின் உடலுக்கு அவரின் மனைவியும் மகளும் இறுதி மரியாதை செலுத்தினர். அதன்பின் முழு ராணுவ மரியாதையுடன் லக்வீந்தர் சிங்கின் உடல் தகனம் செய்யப்பட்டது.