அனைத்து அரசியல் கட்சிகளிடையே கருத்தொற்றுமை ஏற்பட்ட பிறகு கவனமாக பரிசீலித்து மகளிர் இடஒதுக்கீடு மசோதா, நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்படும் என்று மத்திய சட்ட அமைச்சர் கிரண் ரிஜிஜு தெரிவித்தார்.
இதுதொடர்பாக மக்களவையில் உறுப்பினர் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்து பேசிய அவர், மக்களவையிலும் அனைத்து மாநில சட்டப் பேரவைகளிலும் மகளிருக்கு 33 சதவீத இடஒதுக்கீடு வழங்க வகைசெய்யும் மசோதாக்கள், நாடாளுமன்றத்தில் 3 முறை அறிமுகம் செய்யப்பட்டதாகவும் அவை வெவ்வேறு காரணங்களால் காலாவதியாகி விட்டன என்றும் கூறினார்.
பாலின சமத்துவத்தை நிலைநாட்ட வேண்டும் என்பது அரசின் முதன்மையான கடமைகளில் ஒன்று என்று கூறிய அவர், இதற்காக, அரசமைப்புச் சட்டத்தில் திருத்தம் கொண்டுவருவதற்கான மசோதா நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்பட வேண்டும் என்றார்.