ராஜஸ்தான் மாநிலம் பார்வாரா கோட்டையில் நடிகை கத்ரீனா கைப் தனது நீண்ட நாள் காதலர் விக்கி கவுசாலை நேற்று மணம் முடித்துக் கொண்டார்.
பிரம்மாண்டமான அரண்மனையில் பாரம்பரிய முறையில் நடைபெற்ற இத் திருமண விழாவில் குறிப்பிட்ட பேர்களுக்கு மட்டும் அழைப்பு அனுப்பி வைக்கப்பட்டது. அவர்கள் திருமணத்தில் பங்கேற்று மணமக்களை வாழ்த்தினர்.தனது திருமணம் தொடர்பான வண்ணமயமான படங்களை கத்ரினா கைப் இன்ஸ்டா கிராம் மூலம் வெளியிட்டார்.
கத்ரினாவின் நெருங்கிய நட்பு வட்டத்தில் உள்ள நடிகர் சல்மான்கானும் அவர் குடும்பத்தினரும் இத்திருமண விழாவில் பங்கேற்கவில்லை. ஆனால் சல்மான் கானின் பவுன்சர் பாதுகாவலர் ஷேரா தலைமையிலான ஸ்டண்ட் குழுவினர் கத்ரினா திருமணத்துக்கு பாதுகாப்பாக நிறுத்தப்பட்டிருந்தனர்.