அமெரிக்காவின் பைசர் தடுப்பூசி தயாரிப்பு நிறுவனம் நிபுணர்களுக்கு பணம் கொடுத்து இங்கிலாந்தின் ஆஸ்ட்ராசெனிகா தடுப்பு மருந்து குறித்து தவறான தகவல்களை பரப்பச் செய்ததாக புகார் எழுந்துள்ளது.
ஆஸ்ட்ராசென்கா-வை போட்டியாக கருதி பைசர் நிறுவனம் இது போன்று செயல்பட்டதாக விசாரணை அறிக்கை ஒன்றில் கூறப்பட்டுள்ளது. ஆஸ்ட்ராசென்கா-வை செலுத்திக்கொண்டால் புற்றுநோய் ஏற்படும் என்பது, உள்ளிட்ட தகவல்களை பரப்புமாறு பைசர் நிறுவனம் நிபுணர்களை வற்புறுத்தியதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் இந்த குற்றச்சாட்டை பைசர் நிறுவனம் மறுத்துள்ளது.