ஸ்காட்லாந்து நாட்டின் கடைசி அனல் மின் நிலையத்தின் புகைபோக்கி வெடி வைத்து தகர்க்கப்பட்டது.
நிலக்கரி மூலம் நடைபெறும் மின் உற்பத்தி சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிப்பதால், அங்கு அனல் மின் நிலையங்களின் செயல்பாடு படிப்படியாகக் குறைக்கப்பட்டன.
பைப் தீபகற்பத்தில் இயங்கி வந்த கடைசி அனல் மின் நிலையத்திலும் 5 ஆண்டுகளுக்கு முன் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டது. தற்போது அதன் 600 அடி உயர புகைபோக்கி வெடி வைத்து தகர்க்கப்பட்டுள்ளது.