பிரபஞ்சத்தில் உள்ள black hole என்னும் கருந்துளைகளில் இருந்து வெளியேறும் எக்ஸ்ரே கதிர்கள் குறித்து ஆராய புதிய செயற்கைக்கோளை நாசா அனுப்பியுள்ளது.
ஃபுளோரிடாவில் உள்ள கென்னடி விண்வெளி நிலையத்தில் இருந்து ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் ஃபால்கன் 9 ராக்கெட் மூலம் செயற்கைக்கோள் அனுப்பப்பட்டது.
நாசா மற்றும் இத்தாலி விண்வெளி நிறுவனத்தின் கூட்டணியில் 3 டெலெஸ்கோப்கள் மற்றும் எக்ஸ்ரே கதிர்களை அளக்கும் கருவிகள் அனுப்பப்பட்டுள்ளன.