நாட்டில் கிரிப்டோகரன்சிக்கு அனுமதி வழங்கினால் பணம் வழங்கல், பணவீக்க மேலாண்மை ஆகியவற்றின் மீதான கட்டுப்பாட்டை ரிசர்வ் வங்கி இழந்து விடும் என அதன் முன்னாள் ஆளுநர் சுப்பாராவ் தெரிவித்துள்ளார்.
ஒரு கருத்தரங்கில் பேசிய அவர், மைய வங்கியின் டிஜிட்டல் நாணயம் வெளியிடுவதற்கு, வலுவான தரவுப் பாதுகாப்புச் சட்டங்கள் தேவை எனத் தெரிவித்தார். கிரிப்டோகரன்சிகளை நாட்டில் அனுமதித்தால் அது ரிசர்வ் வங்கியின் பணக்கொள்கையைப் பாதிக்கும் எனக் குறிப்பிட்டார்.