முல்லைப் பெரியாறு அணையில் இருந்து முன்னறிவிப்பின்றியும், இரவு நேரத்திலும் கேரளப் பகுதிக்குத் தமிழ்நாடு தண்ணீர் திறந்து விடுவதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் கேரள அரசு மனு தாக்கல் செய்துள்ளது.
தமிழகத்தின் செயலால் கேரளத்தில் பெரியாறு கரையோரத்தில் தாழ்வான பகுதிகளுக்கு வெள்ள அபாயம் உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது. முன்னறிவிப்பு இன்றியும் இரவு நேரத்திலும் அணையில் இருந்து நீர் திறப்பதைத் தடுக்க அறிவுறுத்தும்படி அந்த மனுவில் கேட்டுக்கொண்டுள்ளது.
அணைப் பாதுகாப்புத் தொடர்பான மனுக்கள் வெள்ளியன்று விசாரணைக்கு வரவுள்ள நிலையில் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக ஏற்கெனவே கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்குக் கடிதம் எழுதியுள்ளதையும் மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.