முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத்தின் மறைவுக்கு அமெரிக்கா, ரஷ்யா, சீனா, பாகிஸ்தான் உள்ளிட்ட பல்வேறு நாடுகள் இரங்கல் தெரிவித்துள்ளன.
அவரது இறப்புக்கு இரங்கல் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ள அமெரிக்கா, இந்தியா-அமெரிக்கா ராணுவ உறவை வலுப்படுத்துவதில் ஜெனரல் பிபின் ராவத் பெரும் பங்காற்றியதாக தெரிவித்துள்ளது. இந்தியாவுக்கான சீன தூதர் Sun Weidong வெளியிட்டுயுள்ள இரங்கல் செய்தியில், ஜெனரல் பிபின் ராவத், அவரது மனைவி மற்றும் விபத்தில் உயிரிழந்த அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்வதாக கூறியுள்ளார்.
முப்படை தலைமை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி மற்றும் அதிகாரிகளின் விலைமதிப்பில்லா உயிர்களின் மறைவிற்கு இரங்கலை தெரிவித்துகொள்வதாக பாகிஸ்தான் ராணுவ ஜெனரல் நதீம் ராசா மற்றும் ஜெனரல் காமர் ஜாவத் பாஜ்வா தெரிவித்துள்ளனர். அதேபோல பூடான், நேபாளம், பிரிட்டன், ஆஸ்திரேலியா, பிரான்ஸ், ஜப்பான், இஸ்ரேல், ஜெர்மனி, சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகள் தலைமை தளபதி பிபின் ராவத்தின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளன.